அசத்தல்! மகளிருக்கு தனியாக `பிங்க்’ கலர் இலவச பேருந்துகள்!

அசத்தல்! மகளிருக்கு தனியாக `பிங்க்’ கலர் இலவச பேருந்துகள்!

அசத்தல்! மகளிருக்கு தனியாக `பிங்க்’ கலர் இலவச பேருந்துகள்!
X

தமிழகத்தில் மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 வாரங்களில் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிற நிலையில், கொரோனா நிவாரண நிதி,மாநகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், ரேசன் கடைகளில் மளிகை பொருட்கள் என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


மாநகர பேருந்துகளை பொறுத்த வரை விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் அனைத்து பேருந்துகளும் ஒரே நிறத்தில் இயங்குவதால் இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் நடத்துனர் , பயணிகள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனை தவிர்க்கவும் மக்களின் குறைகளை களையவும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு தனியாக பிங்க் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேருந்துகளின் நிறம் பிங்க் நிறமாக மாற்றப்படும் அல்லது பேருந்துகளில் பிங்க் நிற பட்டை பெயிண்ட்கள் மூலம் அடையாளப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் இயக்கப்படும் 30 பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it