Theme Check

அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் வடமாநில மக்கள் ! இப்போது உத்தரகண்டில் !!

அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் வடமாநில மக்கள் ! இப்போது உத்தரகண்டில் !!

அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் வடமாநில மக்கள் ! இப்போது உத்தரகண்டில் !!
X

வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று மதியம் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மிதமான அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்றே கணக்கிடப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மதியம் 12.18 மணியளவில் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் டெல்லி, உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

குறைந்த அளவிலான ரிக்டர் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. எனினும் அன்மையில் டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it