Theme Check

ரத்தாகும் கேஸ் சிலிண்டருக்கான மானியம்.. மீண்டும் விலை கடுமையாக உயரும் அபாயம் !!

ரத்தாகும் கேஸ் சிலிண்டருக்கான மானியம்.. மீண்டும் விலை கடுமையாக உயரும் அபாயம் !!

ரத்தாகும் கேஸ் சிலிண்டருக்கான மானியம்.. மீண்டும் விலை கடுமையாக உயரும் அபாயம் !!
X

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றனர். இதனால் ஒரு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ரூ.950 வரை வந்துள்ளது. இதனால் ஏற்கெனவே கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து சில மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் சிலிண்டர் ஒன்றுக்கு 1000 ரூபாய் வரை மக்கள் செலுத்த நேரிடும் என கூறப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் சிலிண்டர் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

indian gas

தற்போது இரண்டு முன்மொழிதல்கள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். ஒன்று, மானியமே இல்லாமல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்வது. இரண்டாவது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் மானியம் வழங்குவது. இதுகுறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், சிலிண்டர் மானியம் தொடர்பாக அரசு சில திட்டங்களை பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதன்படி சிலிண்டருக்கான மானியம் பெறுவதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அதிக வருமானம் ஈட்டும் குடும்பங்களால் சிலிண்டர் மானியம் பெற விண்ணப்பிக்க முடியாது என தெரிகிறது. உதாரணமாக, ஒரு குடும்பம் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அக்குடும்பத்தால் சிலிண்டர் மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியாமல் போகலாம். இதனால் அவர்கள் சிலிண்டரை அதிக பணம் செலுத்தி வாங்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it