Theme Check

திடீர் பரபரப்பு.. அதிமுக எம்எல்ஏ முனுசாமி தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் !!

திடீர் பரபரப்பு.. அதிமுக எம்எல்ஏ முனுசாமி தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் !!

திடீர் பரபரப்பு.. அதிமுக எம்எல்ஏ முனுசாமி தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் !!
X

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்எல்ஏ-வுமான கே.பி. முனுசாமி இன்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் .

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகபடுத்துவதாக குற்றசாட்டு எழுந்துவந்தது.

இந்த நிலையில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி அந்த செயலை கண்டித்து கே.பி. முனுசாமி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
farmer
சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு பந்தல் அமைத்து தனி ஒருவராக அமர்ந்து உண்ணாவிரதப் போராட்த்தை தொடங்கியுள்ளார். 5 ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே மாநில அரசே பறிக்காதே, என்று குறிப்பிடப்பட்ட பதாகையுடன் போராட்டடத்தை தொடங்கியுள்ளார்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it