Theme Check

திடீர் பரபரப்பு.. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா.!

திடீர் பரபரப்பு.. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா.!

திடீர் பரபரப்பு.. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா.!
X

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அசோக் கெலாட் வசம் கொடுத்துள்ளனர். இன்று புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.

இவ்வாறு புதிய அமைச்சர்கள் அறிவிப்பதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் மேற்கொள்ளப்படும் விவாதத்தின் அடிப்படையில் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த அறிவுப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sachin poilet
அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்க்கும்- மாநில மூத்த நிர்வாகியுமான சச்சின் பைலட்க்கும் இடையே பணிப்போர் நிலவி வருகிறது. இருவருக்கும் இடையேயான சண்டை டெல்லி வரை சென்று பஞ்சாயத்து தீர்த்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it