Theme Check

திடீர் அறிவிப்பு! இனி வாராந்திர தடுப்பூசி முகாம்கள் இல்லை!!

திடீர் அறிவிப்பு! இனி வாராந்திர தடுப்பூசி முகாம்கள் இல்லை!!

திடீர் அறிவிப்பு! இனி வாராந்திர தடுப்பூசி முகாம்கள் இல்லை!!
X

வாரந்தோறும் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இனி நடைபெறாது என தமிழக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் உலகையே ஆட்டுவித்துவிட்டது. முதல் அலை, இரண்டாம் அலை, 3ஆம் அலை என்று மக்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்துவிட்டனர். குறிப்பாக 2ஆம் அலை ஏராளமான உயிர்களை பலிவாங்கிவிட்டது.

எனவே தான் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மத்திய அரசு முன்கள பணியாளர்கள் தொடங்கி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கியது.

vaccine 2

அந்த வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துவிட்டது. மேலும் பெரும்பாலானோர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.

vaccine 2

இந்நிலையில், இனிமேல் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே தடுப்பூசி முகாம்களை நடத்திக்கொள்ள மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி முகாம்கள் எங்கெங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குநர்கள் கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் என மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

newstm.in

Next Story
Share it