கொரோனா மருந்து ஏற்றுமதிக்கு திடீர் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு !
கொரோனா மருந்து ஏற்றுமதிக்கு திடீர் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ரெம்டெசிவர் மருந்து அதிகளவில் பலன் கொடுத்தது.
இந்த நிலையில், மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட்டு வருவதால் ரெம்டெசிவர் ஊசியின் தேவை திடீரென அதிகமாக்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவில் ரெம்டெசிவர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளதால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் வரை அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஜிலீட் சயீன்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ரெம்டெசிவர் ஊசியை, 7 இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள், மாதம் 38.80 லட்சம் மருந்துகள் தயாரிக்கும் திறன் வாய்ந்தவை.
இந்தியாவில் கொரோனா அசாதாரண சூழல் நிலவுவதால் கொரோனா அதிகரிப்பு சூழலை கருத்தில் கொண்டு, இந்தியாவில் கொரோனா நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் ஆக்டிவ் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும், ரெம்டெசிவர் ஊசிகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
ரெம்டெசிவர் ஊசி மருந்து இருப்பு விவரங்களை மருந்து ஆய்வாளர்கள் மற்றும் இதர அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இதில் முறைகேடுகள் நடந்ததால் மற்றும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
newstm.in

