Theme Check

கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி ! மருத்துவமனையில் மீண்டும் அனுமதி !1

கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி ! மருத்துவமனையில் மீண்டும் அனுமதி !1

கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி ! மருத்துவமனையில் மீண்டும் அனுமதி !1
X

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், உடனே கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இம்மாதம் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கங்குலிக்கு மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஒரு அடைப்பை நீக்குவதற்காக ஸ்டெண்ட் வைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப்பின் உடல்நிலையை பரிசோதனை செய்யவே இன்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடலுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர் நலமுடன் உள்ளார். ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப்பின் வழக்கமான பரிசோதனை தான் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கங்குலிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது நெகடிவ் ரிசல்ட் வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் கொரோனா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it