Theme Check

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி!!

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி!!

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி!!
X

துபாய் சர்வதேச கண்காட்சிக்கு செல்ல இருந்த அமைச்சர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக பயணத்தை ரத்து செய்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக துபாய் செல்ல நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டமிட்டிருந்தார். அங்கு தமிழக அரசு சார்பாக நடைபெறவுள்ள கருந்தரங்கில் கலந்துக்கொள்ள இருந்தார்.

நேற்று காலை 9 7.50 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் விமானத்தில் துபாய் செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர் .

durai

இதனையடுத்து விசாவில் உள்ள பழைய பாஸ்போர்ட் எண் மாற்றப்பட்டு நேற்று மாலை துபாய் செல்ல டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மாலை 4 .30 மணியளவில் விமான நிலையத்திற்கு துரை முருகன் வந்தார்.

அப்போது விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக துரைமுருகன் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் பைலட்டிடம் தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து 15 நிமிடங்கள் விமானம் புறப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்தும் நெஞ்சுவலி இருந்ததால் விமானத்தில் இருந்து கிழே இறங்கிய அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it