Theme Check

திடீரென பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திடீரென பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திடீரென பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
X

பள்ளி மாணவி ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியை சேர்ந்த ரமேஷ் (39) - கௌரி (35) தம்பதியின் 12 வயது மகள் ஜெனிபர் சேலையூரில் உள்ள, தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ஜெனிபர் கடந்த இரண்டு நாட்களாக, வயிற்று வலியால் அவதிப்பட்டு, பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது, பாட்டி கன்னியம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த, ஜெனிபர் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

hang

இதையடுத்து வெளியே சென்ற கன்னியம்மாள், திரும்பி வீட்டிற்கு வந்தபோது, கதவு திறக்காததால் வீட்டில் உள்ளவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஜெனிபர் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார், உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it