கொடைக்கானல் மலையில் திடீர் தீ.. அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறல்..!
கொடைக்கானல் மலையில் திடீர் தீ.. அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறல்..!

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ளது ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல். இங்கு அரிய வகை மரங்கள், சுமார் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய அதிக வெயில் அடிக்கும் மாதங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில், பெருமாள் மலைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனால், பல அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் கருகி வருகின்றன. இதனால், அப்பகுதி கடுமையான புகை மண்டலமாக மாறி வருகிறது.

100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தீ வேகமாகப் பரவி வருவதாலும், அதிகப்படியான புகையினாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக தீயணைப்புத்துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

