டாஸ்மாக் மதுபான விலை திடீர் உயர்வு! குடிமகன்கள் சோகம்!!
தமிழகத்தில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பீர் 10 ரூபாய் வரையும், மற்ற மதுபான வகைகள் குறைந்த பட்சம் ரூபாய் 10 முதல் 40 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.800 கோடி வரை வருவாய் அதிகரிக்கும்.

தமிழகத்தில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஒரு குவார்ட்டரின் விலை ரூ10 ரூபாயும் ; ஒரு ஆஃப் விலை 20 ரூபாயும்; ஒரு ஃ புல் விலை 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பீர் விலை 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒருசில டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலையில் ஊழியர்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விலையேற்றம் அதிருப்தியை தருவதாக குடிமகன்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.
newstm.in