வண்ணாரப்பேட்டை முஸ்லீம்கள் போராட்டத்தில் திடீர் திருமணம்! திருமணத்திற்கு பின்பும் போராட்டத்தில் கலந்துக் கொண்ட புதுமண தம்பதியினர்!!
கடந்த வெள்ளியன்று துவங்கிய போராட்டம், தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் ஜோடிக்கு இன்று திருமணம் நடத்துவதற்காக தேதி குறித்து வைத்திருந்தனர். தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடைப்பெற்று வருவதால், போராட்டக் களத்திலேயே

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி சென்னை, வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளியன்று துவங்கிய போராட்டம், தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் ஜோடிக்கு இன்று திருமணம் நடத்துவதற்காக தேதி குறித்து வைத்திருந்தனர். தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடைப்பெற்று வருவதால், போராட்டக் களத்திலேயே அனைவர் முன்னிலையிலும் இந்த இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. போராட்டக் களத்தில் இந்த திடீர் திருமணமும், திருமணத்திற்குப் பின்னரும் புதுமணத் தம்பதியினர் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
Tags:
Next Story

