Theme Check

திடீர் ஸ்ட்ரைக்! போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!

திடீர் ஸ்ட்ரைக்! போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!

திடீர் ஸ்ட்ரைக்! போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
X

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் விடுத்த அறிக்கையில்,போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு வழங்க கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மாநிலத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த நேரத்தில் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாத சூழ்நிலையிலும், அதுகுறித்து வாக்குறுதியும் வழங்க முடியாமலும் இருந்து வருகிறோம்.

ஆனாலும் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் இது குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து அரசின் நிதி நிலையை கவனத்தில் கொண்டு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கக்கூடாது.பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம். ஊழியர்களின் நலனில் அரசு சமரசம் செய்து கொள்ளாது.

கொரோனா பரவல் ஏற்பட்டு வரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். மே 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது. தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கினால் சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்கலாம். ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பிடிவாதமாக இருக்கக்கூடாது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it