Theme Check

தோனிக்கு திடீரென 'டிக்' நீக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் தெரியாமல் குழப்பம் !!

தோனிக்கு திடீரென 'டிக்' நீக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் தெரியாமல் குழப்பம் !!

தோனிக்கு திடீரென டிக் நீக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் தெரியாமல் குழப்பம் !!
X

கிரிக்கெட் வீரர் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனால், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கேப்டனான தோனி விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

dhoni

ஐபிஎல் போட்டிகள் இல்லாத நேரங்களில் அவர் தனது தோட்டத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது புகைக்படங்களுடன் தகவல் கூறிவருகிறார். மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படும். அதுபோல தோனியின் ட்விட்டர் கணக்குக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

dhoni

இது குறித்து ரசிகர்கள் பலரும் ட்விட்டரிடம் கேள்வி எழுப்பினர். தோனி தனது ட்விட்டர் கணக்கில் கடைசியாக ஜனவரி 8 அன்று ட்வீட் வெளியிட்டுள்ளார். அதற்குப் பிறகு ஒரு ட்வீட்டும் பதிவிடவில்லை. இதனால் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்க வாய்ப்புள்ளது. தோனியின் கடைசி இரு ட்வீட்கள் 2021 ஜனவரி 8, 2020 செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் வெளிவந்துள்ளன.

இதனிடையே, ப்ளூ டிக் வழங்குவது பற்றி ட்விட்டரின் விளக்கம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகாரபூர்வமான கணக்கு என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காக ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. ப்ளூ டிக் கிடைப்பதற்கு உங்களுடைய கணக்கு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் அதிகாரபூர்வமானதாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

தோனி கடைசியாக பதிவிட்ட ட்விட் இதுதான்..


newstm.in


Tags:
Next Story
Share it