Theme Check

திடீர் சோகம்.. அழகி பட்டம் வென்ற மாடல் பலி !!

திடீர் சோகம்.. அழகி பட்டம் வென்ற மாடல் பலி !!

திடீர் சோகம்.. அழகி பட்டம் வென்ற மாடல் பலி !!
X

அழகி பட்டம் வென்ற 27 வயது இளம்பெண் டான்சில அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டில் 2018ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் அழகி பட்டம் வென்றவர் கிளெய்சி கொரிய்யா. தென்கிழக்கு நகரமான மெகேவைச் சேர்ந்த இவர் அழகி பட்டம்வென்ற பிறகு பிரபலமானார். பல்வேறு விளம்பரங்களில் நடித்தார். மேலும் அங்கு ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்து வந்தார்.

brazil miss

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுபோன்று இவர் அவ்வப்போது சிகிச்சை அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடைசியாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

brazil miss

அங்கு கிளெய்சிக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்த கிளெய்சி சிகிச்சை தற்போது பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். மேலும் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்து புகார் அளித்துள்ளனர்.

newstm.in


Next Story
Share it