நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!
நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் போல் நடித்து பணம் கேட்டு மிரட்டியதே மும்பையில் இளம் நடிகை தற்கொலை செய்து கொள்ள காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பை ஜோகேஷ்வரி பகுதியைச் சேர்ந்த இளம் நடிகை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு பேர் தங்களைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என கூறினர்.
போதைப் பொருள் பயன்படுத்தியதால் உங்களைக் கைது செய்தாக நடிகையிடம் கூறினர். பின்னர் அவர்கள் இருவரும் ரூ.40 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று அப்பெண் கூறியதை அடுத்து ரூ.20 லட்சம் கேட்டுள்ளனர்.

பிறகு வீட்டிற்கு வந்த நடிகை, இவ்வளவு பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்த நடிகை, திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பார்டிக்கு நடிகையுடன் சென்ற நண்பர்களை விசாரணை செய்தனர். அப்போது நடிகையுடன் பார்டிக்கு சென்ற ஆசிர் காஜி என்பவர் தான் இதற்கு காரணம் என தெரியவந்தது.

தனது நண்பர்களை வைத்து போதைப்பொருள் அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

