திடீர் திருப்பம்! சசிகலா உடன் ஓபிஎஸ் சகோதரர் சந்திப்பு!!
திடீர் திருப்பம்! சசிகலா உடன் ஓபிஎஸ் சகோதரர் சந்திப்பு!!

சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா திடீரென சந்தித்ததால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வி.கே.சசிகலா இரண்டு நாள் பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவித்தார். சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் ஆன்மிக பயணம் செல்வதாகவும், கட்சி சார்ந்த அலுவல் கூட்டம் இல்லை என அறிவித்தார்.
ஆனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றிருந்த சசிகலாவை திருச்செந்தூரில் ஓபிஎஸ்-இன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கோவையில் முன்னாள் ஆறுகுட்டியும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து இதுதொடர்பார ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
ஓபிஎஸ் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடன் ஆலோசனை நடத்த, ஈபிஎஸ் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஓபிஎஸ் சகோதரர் சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது அதிமுக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

