Theme Check

திடீரென வெடித்துச் சிதறிய டிரான்ஸ்ஃபார்மர்!!

திடீரென வெடித்துச் சிதறிய டிரான்ஸ்ஃபார்மர்!!

திடீரென வெடித்துச் சிதறிய டிரான்ஸ்ஃபார்மர்!!
X

பெங்களூருவில் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தையும் மகளும் படுகாயம் அடைந்தனர்.

பெங்களூரு நைஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த சிவராஜ் மற்றும் அவரது மகள் சைத்தன்யா, ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபம் சென்றனர். சைத்தன்யாவின் திருமணத்துக்காக மண்டபத்தை முன்பதிவு செய்ய சென்றனர்.

blr

முன்பதிவு செய்துவிட்டு பின்னர் துணி வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் திடீரென வெடித்து சிதறியது. அதனால் ஏற்பட்ட தீ அவ்வழியே சென்ற சிவராஜ், சைத்தன்யா மீது பட்டது.

இதனால் தீக்காயமடைந்த இருவரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மின்சார வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Transformer

காலை முதலே டிரான்ஸ்ஃபார்மரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், மாலை 4 மணி ஆகியும் மின்வாரிய அதிகாரிகள் வந்து சரி செய்யாததால்தான் விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பெங்களூரு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it