திமுக பிரமுகர்கள் தொல்லையால் தற்கொலை.. ஆடியோ வெளியிட்ட ஆய்வாளர்..!
திமுக பிரமுகர்கள் தொல்லையால் தற்கொலை.. ஆடியோ வெளியிட்ட ஆய்வாளர்..!

திமுக பிரமுகர்கள் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வேப்பங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோ குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணிபுரிபவர் சீனிவாசன் (50). இவர், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேசிய ஆடியோ, தற்போது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.
சீனிவாசன் வெளியிட்ட ஆடியோவில், “நான் வேப்பங்குப்பம் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறேன். ஏலச்சீட்டு மோசடி சம்பவம் குறித்து திமுக பிரமுகர்கள் சிலர் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என மிரட்டுகின்றனர்.
வழக்குப் பதிவு செய்யாத காரணத்தை உயர் அதிகாரிகளிடம் கூறி விட்டேன். இங்கு மணல் கடத்தினால் வழக்கு பதிவு செய்யக்கூடாது என திமுக பிரமுகர்கள் சிலர் டார்ச்சர் செய்கின்றனர். இதனால் எனக்கு மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்னால் வாழ முடியவில்லை.
அதனால், 29ம் தேதி இரவு தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோவில், மிரட்டிய திமுக பிரமுகர்கள் 4 பேரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

