தனியார் நிதி நிறுவனங்களால் தொடரும் தற்கொலைகள்..!! விழுப்புரத்தில் நடந்த சோகம்!!
தனியார் நிதி நிறுவனங்களால் தொடரும் தற்கொலைகள்..!! விழுப்புரத்தில் நடந்த சோகம்!!

விழுப்புரம் நகர பகுதியான வானகார குப்புசாமி தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வருபவர் ரவிக்குமார் (22). கூலி வேலை செய்து வரும் இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் மாத தவணையில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த இரு சக்கர வாகனத்திற்கு கடந்த 3 மாதமாக மாத தவனையை ரவிக்குமார் செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர் இளைஞரின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த இளைஞர் கடந்த 25-ம் தேதி இரவு வீட்டிற்கு அருகிலுள்ள கட்டிடத்தில் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பூச்சி மருந்து அருந்திவிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் ரவிக்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து டவுன் போலீசார் தனியார் நிதி நிறுவன ஊழியர் மேகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் உடல் இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் அவரது தந்தை செல்வமும் உயிரிழந்துள்ளார். பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மகன் இறப்பை தாங்க முடியாமல் தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

