கொளுத்தும் வெயில்.. இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ரத்து !!
கொளுத்தும் வெயில்.. இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ரத்து !!

நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கி கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் அனல் போல் கொதிக்கும் வெப்பத்தால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை அவசியமற்ற பணிகளை தவிர மற்றவர்கள் வெளியே சுற்றவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசாவில் நிலவும் வெப்பம் காரணமாக, ஒடிசா அரசு நாளை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒடிசாவின் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் வகுப்புகள் ஏப்ரல் 27 முதல் மே 2 வரை ரத்து செய்யப்படும் என்று அம்மாநில உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும், தேர்வு, மதிப்பீடு, நிர்வாகப் பணிகள், ஆராய்ச்சிப் பணிகள் போன்ற பிற செயல்பாடுகள் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை இதனை அறிவித்துள்ளது.

அதேவேளையில், ஏற்கனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

