சிவகார்த்திகேயனுடன் ஐந்து பட டீல் போட்ட சன் டிவி !!
சிவகார்த்திகேயனுடன் ஐந்து பட டீல் போட்ட சன் டிவி !!

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். இவர் திருச்சி அருகே உள்ள ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். பின்னர், விஜய் டிவியில், மிமிக்ரி செய்து அதன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அவர் படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இதுவரை கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. இவர் மேலும் ஒரு படத்தை தயாரித்து முடித்துள்ளார். அதுதான் ‘வாழ்’. இது அருவி பட இயக்குநர் அருண் புருஷோத்தமன் இயக்கியுள்ள படமாகும்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் சில திட்டமிடப்பட்டதையும் தாண்டி அதிகம் செலவு செய்யப்பட தயாரிப்பாளர் கொடுக்கவேண்டிய கடனை, தன் கடனாக ஏற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக்கொடுக்கும் பொறுப்பை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். இதனால் அடுத்தடுத்து படங்கள் செய்து கடனை விரைந்து அடைக்கவேண்டிய சூழலில் தள்ளப்பட்டார் சிவா.
இந்தநிலையில் கடனை அடைத்தே தீர வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு 5 பட டீலுடன் வந்தது சன் பிக்சர்ஸ். 2 ஆண்டுகளில் எங்கள் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கப்போறாராம் . ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் என ரூ. 75 கோடி சம்பளமாம். தற்போதைய சூழலில் இது ஒரு நல்ல டீல் என்பதால் சிவகார்த்திகேயன் உடனடியாக ஒகே சொல்லிவிட்டாராம்.சிவகார்த்திகேயனை இயக்கப் போகும் அந்த 5 இயக்குநர்கள் யார், யார் என்பது எல்லாம் இதுவரை தெரியவில்லை.

