சூப்பர்! இனி ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர் வாங்கலாம்!!
சூப்பர்! இனி ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர் வாங்கலாம்!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பை வழங்க வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, இதற்காக இலவச சிலிண்டர் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் சமையல் சிலிண்டர்களுக்கு மானிய உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரேஷன் டீலர்கள் சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி, விரைவில் 5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும். சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

