Theme Check

சூப்பர் அறிவிப்பு! சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அமல்!!

சூப்பர் அறிவிப்பு! சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அமல்!!

சூப்பர் அறிவிப்பு! சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அமல்!!
X

கொரோனா தொற்று பரவலுக்கு முன் இயக்கப்பட்டது போல் இனி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத்தொடர்ந்து, ரயில்வே நிர்வாகமும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

அதன்படி, சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட அனைத்து கட்டுபாடுகளும் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

train

இந்நிலையில் புறநகர் ரயில் சேவைகள் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட எண்ணிக்கையில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு விதித்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்ப பெற்றப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் அனைத்து வழித்தடங்களிலும், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட எண்ணிக்கையில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it