சூப்பர் அறிவிப்பு! மார்க் ஷீட், டி.சி.யை இனி எளிதில் பெறலாம்!!
சூப்பர் அறிவிப்பு! மார்க் ஷீட், டி.சி.யை இனி எளிதில் பெறலாம்!!

மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எளிதாக பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க அவர்களின் மதிப்பெண் சான்றிதழும், மாற்று சான்றிதழும் முக்கிய ஆவணங்களாக கேட்கப்படுகின்றன.
இந்த சான்றிதழ்கள் இதுநாள்வரை மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இச்சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட 23 முக்கிய ஆவணங்களை மாணவர்கள் இனி இ-சேவை மையங்களில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான முக்கிய சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம்.

சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களும், சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் இந்த மையங்களில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

