Theme Check

சூப்பர் அறிவிப்பு! ரூ.2,000 நேரடியாக வீட்டுக்கே வரும்!!

சூப்பர் அறிவிப்பு! ரூ.2,000 நேரடியாக வீட்டுக்கே வரும்!!

சூப்பர் அறிவிப்பு! ரூ.2,000 நேரடியாக வீட்டுக்கே வரும்!!
X

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் 2000 ரூபாய் இனி நேரடியாக வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயக் குடும்பங்களுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்படுகிறது.

கடந்த மே 30ஆம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் கீழ் 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

money

வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் அனுப்புவதே விவசாயிகளுக்கு பெரும் சவுகரியமாக இருந்து வந்த நிலையில், வீட்டுக்கே நேரடியாக 2000 ரூபாயை டெலிவரி செய்வதற்காக இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காகஆப்கா பேங்க், ஆப்கே துவார் என்ற திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பிரதமர் கிசான் 2000 ரூபாய் பணம் நேரடியாக வீட்டுக்கே வழங்கப்படும். தபால் ஊழியர்கள் இந்த பணத்தை வீட்டுக்கே டெலிவரி செய்வார்கள்.

newstm.in

Next Story
Share it