Theme Check

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்.. வெளியான உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்.. வெளியான உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்.. வெளியான உத்தரவு
X

4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்களிடம் கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

school

அந்த வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் லதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அனைத்து வகையான ஆசிரியர்களை முதலில் அடையாளம் கண்டறிய வேண்டும். அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

school

தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வரும் 30, 31 ஆகிய இரண்டு தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும், இது குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும், என்றும் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it