சூப்பர் முயற்சி! கைதிகளை கொண்டு இயங்கும் பெட்ரோல் பங்க்!!
சூப்பர் முயற்சி! கைதிகளை கொண்டு இயங்கும் பெட்ரோல் பங்க்!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஹரியானா அரசு 11 சிறை எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க உள்ளது.
முன்னோட்டமாக, குருக்ஷேத்ரா சிறையில் பெட்ரொல் பங்க்-கள் மே 31 முதல் செயல்படத் தொடங்கியது. குருக்ஷேத்ராவுக்குப் பிறகு, யமுனாநகர், கர்னால், ஜஜ்ஜார், ஃபரிதாபாத், குர்கான், பிவானி, ஜிந்த் மற்றும் ஹிசார் ஆகிய சிறைகளில் இதேபோன்ற எரிபொருள் நிலையங்கள் இயக்கப்படும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
சிறைத்தண்டனையின் பெரும் காலத்தை ஏற்கனவே சிறைகளில் கழித்த நல்ல நடத்தை கொண்ட தண்டனை கைதிகள் மட்டுமே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். விசாரணைக் கைதிகள் இங்கு பணிபுரிய அனுமதி இல்லை.

இந்த சிறை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கைதிகளுக்கு பயிற்சி அளிப்பதை ஜெயிலர் முதலில் உறுதி செய்வார். அதன்பிறகு அவர்களின் நடத்தைக்கு ஏற்ப சுழற்சி அடிப்படையில் அவர்களின் பணிநேரம் இருக்கும் என்று சிறைத்துறை அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா தெரிவித்துள்ளார்.
கைதிகள் வெளியே மனிதர்களோடு சகஜமாக வாழ, வேலை செய்ய இது உதவும். இந்த நிரப்பு நிலையங்களுக்கு மக்கள் வரும்போது, கைதிகளும் சாதாரண மக்களைப் போல வேலை செய்ய முடியும் என்பதை அவர்கள் உணர்வார்கள். அந்நியப்படுத்தாமல் இருக்க பழகுவார்கள்.

கைதிகளை சீர்திருத்தவும், மறுவாழ்வு அளிக்கவும் முடியும் என்ற செய்தி மக்களிடையே சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் கைதிகளுக்கு சிறை கையேட்டின்படி ஊதியம் வழங்கப்படும்.
கைதிகள் இரவு 7:30 மணிக்குள் சிறைக்குள் இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுவதால், அதிகாலை நேரத்திலும் பின்னர் மாலை நேரத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையம் சிறை ஊழியர்களால் இயக்கப்படும் என்றார் .
newstm.in

