இளையராஜா ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
இளையராஜா ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

இளையராஜா வெகுகாலமாக இசையமைக்க பயன்படுத்திய ப்ரசாத் ஸ்டூடியோவுடன் கருத்து மோதல் ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி கோடம்பாக்கத்தில் தமது புதிய ஸ்டுடியோவை அமைத்துள்ளார். அந்த ஸ்டூடியோவுக்கு வந்த ரஜினிகாந்த் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் 'இளையராஜா ஸ்டுடியோ' என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இசைப்பணிகள் முதலில் இந்த புதிய ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டன. அன்றைய தினம் பல்வேறு திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் , ரசிகர்கள் , உறவினர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவை சுற்றிப் பார்க்கச் சென்றார். அங்கு நடக்கும் இசைப் பணிகளை சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பார்வையிட்டார். கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாகவும், மிகுந்த நெகிழ்ச்சியுடனும், ரசிப்பு தன்மையுடனும் ஸ்டூடியோ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இளையராஜாவுக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார் ரஜினி.
அதன் பிறகு ஸ்டுடியோவிலேயே அமர்ந்து இளையராஜாவுடன் வெகு நேரம் உரையாடிவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அதுபோல் நேற்றும் மீண்டும் ஆச்சரியம் தரும் வகையில் இளையராஜா ஸ்டுடியோவுக்கு வருகை அளித்துள்ளார் ரஜினிகாந்த் . அங்கு நடக்கும் இசைப் பணிகளை நிதானமாக ரசிப்பு தன்மையுடன் அமர்ந்து பார்த்ததை வீடியோக்களாக, புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

