அண்ணாத்த படத்தில் காமெடியில் அசத்தப் போகும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!!
அண்ணாத்த படத்தில் காமெடியில் அசத்தப் போகும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இமான் முதல் முதலாக ரஜினி படத்திற்கு இசை அமைத்துள்ளார். நயன் தாராவுடன் மீனா குஷ்பூ என மூன்று நாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தில் சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.சமீபத்தில் வெளிவந்த பேட்ட, தர்பார் படங்களில் சில காமெடி காட்சிகள் இருந்தாலும் அவை முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களாகவே அமைந்து விட்டது. தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், ராஜாதி ராஜா, தர்மதுரை, வீரா, மன்னன், முத்து, சந்திரமுகி போன்ற படங்களில் ரஜினியின் காமெடியும் சூப்பர் ஹிட்டாகி இருந்தது
அண்ணாத்த படத்தில் மீண்டும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஜினிகாந்த் நடித்து வருவதாகத் தெரிகிரது, இது குறித்து நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஜார்ஜ் மரியான் கூறியுள்ளார்.
”அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும்” என்று ஜார்ஜ் மரியான் தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் @rajinikanth ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும்
— Actor GeorgeMaryan (@GeorgeMaryanOff) April 15, 2021
ரசிகர்களுக்கு முழு நீள தீபாவளி விருந்து படைக்க தயாராகி வருகிறார் அண்ணாத்த!
newstm.in

