Theme Check

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய ஆதரவாளர்..!

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய ஆதரவாளர்..!

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய ஆதரவாளர்..!
X

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையுடன் கூடிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆந்த் பகுதியைச் சேர்ந்தவர் மயூர் முந்தே. 37 வயதான இவர் நில விற்பனை தொழில் செய்துவருகிறார். பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான இவர், பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி விரும்பினார்.

இதற்காக, ஜெய்ப்பூரில் இருந்து சிவப்பு பளிங்கு கற்களை இறக்குமதி செய்து, பிரதமர் மோடியின் மார்பளவு சிலையுடன் ரூ.1.6 லட்சம் மதிப்பில் இந்த கோயிலைக் கட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள முந்தே, “ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, ராமர் கோயில் கட்ட நடவடிக்கை, முத்தலாக் பிரச்னை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதை கெளரவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Tags:
Next Story
Share it