நாளை ஓய்வு பெறும் சூரப்பா! விசாரணைக் கமிஷன் என்னாகும்?
நாளை ஓய்வு பெறும் சூரப்பா! விசாரணைக் கமிஷன் என்னாகும்?

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக ஆளுநரால் நியமிக்கப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவின் பதவிக்காலம் நாளை, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.
தமிழக அரசை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியை எடுத்ததற்காக கடுமையான விமர்சனங்களுகு ஆளானார். உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தலையிட்டு தற்போதைய நிலையே நீடிக்கும் என்று அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சூரப்பா மீது ஊழல் விசாரணை நடத்துவதற்காக உயர் கல்வித்துறை சார்பில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த போது விசாரணை ஆணையம் எந்த அளவுக்கு விசாரணையை முடித்துள்ளது என்று கேட்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தேவையான ஆவணங்களை கேட்டுப் பெற்ற பிறகு, சூரப்பா மீது ஊழல் புகார் தெரிவித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது, பேரிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. அந்த பணிகளை 10 முதல் 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதன் பின்னர், விசாரணை குறித்த அறிக்கை தயார்செய்து அரசுக்கு தெரிவிக்கப்படும். விசாரணை அறிக்கை மீது அரசு சில முடிவுகளை எடுத்து ஆளுநரிடம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பதவிக்காலம் முடிவுற்றாலும் விசாரணை ஆணையத்திர்கு சூரப்பா வந்து பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

