நிச்சயம் +2 தேர்வு !! 23 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
நிச்சயம் +2 தேர்வு !! 23 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பிளஸ்2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தபப்ட்டு வரும் நிலையில் பண்டிகைகள், தேர்தல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.தற்போது நேரடி வகுப்புகள் முழுமையாக ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் நேற்று மீண்டும் வகுப்புகள் தொடங்கின. மே 3ம்தேதி பொதுத்தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் ஏப்ரல் 16முதல் 23 வரை செய்முறை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி
1.பள்ளிகள் செய்முறை தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
2 ஒவ்வொரு முறையும் அனைத்து சாதனங்களும் கிருமி நாசினியை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
3. தேர்வுக்கு வரும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
4. மாணவர்களுக்கு 4 சதுர மீட்டர் தூரத்துக்குள் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.
5.கைகளை சுத்தம் செய்யத் தேவையான அளவிற்கு ஹேன்ட் சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
6. ஹேன்ட் சானிடைசர் போன்ற தீப்பற்றி எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்.
7. ஹேன்ட் சானிடைசர் பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொட வேண்டாம்.
8. செய்முறை கூடத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமல்ல ஊழியர்களும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் ஆகியவை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
9. செய்முறை தேர்வு நடக்கும்போது கதவு, ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.
10ஒவ்வொரு அறையிலும் ‘எக்சாஸ்ட்’ மின்விசிறிகள் ஓடப்படவேண்டும்.

11. அனைத்து மாணவர்கள் ஊழியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
12. தேர்வு நடக்கும்போது மாணவர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
13. மாணவர்கள் சொந்த சானிடைசர், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.
14. ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
15. ஆய்வுக்கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
16. ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் மற்ற மாணவர்களும் காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகள் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.
17. அந்த ஓய்வு அறைகளையும் மாணவர்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
18. பாதுகாப்பான குடிநீர் தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும் வைத்து இருக்க வேண்டும்.
19. கழிவறைகளை தண்ணீர் வசதிகளுடன் சிறந்த முறையில் சுத்தம் செய்து இருக்க வேண்டும்.
20. மாணவர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தப்படும்.

21. நோய் பாதிப்பு மண்டலத்தில் பள்ளிகள் அமைந்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் தேர்வு நடத்தப்படும்.
22. வேதியியல் செய்முறைத் தேர்வில் பிப்பெட் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது.
23. அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்தேர்வில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்த கூடாது. மேலும் செய்முறை தேர்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘டாப்ஷீட்’ அந்தந்த பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படும் எனவும் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

