மாநாடு படம் பற்றி சுரேஷ் காமாட்சி அப்டேட்! கடுப்பான ரசிகர்கள்!
மாநாடு படம் பற்றி சுரேஷ் காமாட்சி அப்டேட்! கடுப்பான ரசிகர்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் பாடல் ரம்ஜானை முன்னிட்டி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாடல் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் ‘மாநாடு’ படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா முதல் அலை காரணமாக படப்பிடிப்பு பணிகளை தொடர முடியாமல் போனது.
அதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற போது கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டது. இதனால் படத்தின் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டன. எனினும் நெருக்கடியாக காலக்கட்டத்திற்கு இடையில் மாநாடு படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன.

நீண்ட நாட்கள் இந்த படம் தயாரிப்பில் இருப்பதால், ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் மாநாடு படத்தின் பாடலை வரும் 14-ம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆனால் சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானார்.
இதனால் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டியை அன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்போது அறிவித்துள்ளார். விரைவில் மற்றொரு தேதியில் பாடல் வெளியாகும் என ரசிகர்களுக்கு உறுதியளித்து அவர், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

