Theme Check

ஆச்சர்யம் ! தினமும 5 பைசா செலவு இல்லாமல் சமையல் செய்யும் தம்பதி !!

ஆச்சர்யம் ! தினமும 5 பைசா செலவு இல்லாமல் சமையல் செய்யும் தம்பதி !!

ஆச்சர்யம் ! தினமும 5 பைசா செலவு இல்லாமல் சமையல் செய்யும் தம்பதி !!
X

கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் கிணற்றில் வெளியேறிய கேஸை வைத்து இலவசமாக 10 வருடங்களாக உணவு சமைத்து உண்ட குடும்பம்

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரமேன்சன் மற்றும் ரத்தினம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இதனால், இவர்கள் குடிநீருக்காக பெரும் துன்பம் அனுபவித்து வந்தனர். இதனால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வந்தனர். இறுதியாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வீட்டில் கிணறு தோண்டுவது என முடிவு செய்து கிணறு தோண்டியுள்ளனர்.

ஆனால் இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீர் நிறம் வழக்கம் போல் உள்ள கிணற்றில் உள்ள நீரின் நிறத்தை விட சற்று மாறுப்பட்ட வகையில் இருந்தது. இதனால், இந்த கிணற்றை மூடி விட்டு, அதன் அருகிலேயே வேறு ஒரு கிணறு வெட்டினர். அதில், சமையல் எரிவாயு போல வாடை வந்ததால். அதனை வைத்து சோதனை ஓட்டமாக சமையல் செய்துள்ளனர்.

இதனால், ஆச்சர்யம் அடைந்த அந்த தம்பதிகள் ஒரு குழாய் மூலம் கிணற்றில் இருந்த வாயுவை, வீட்டு சமையலறைக்கு கொண்டு வந்து. அதன் மூலம் அடுப்பை இணைத்து அதில் சமையல் செய்து வருகின்றனர். இதுபோன்று கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் சமையல் செய்து வருகிறார்களாம். இந்த தகவல் அறிந்து அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கிறார்களாம்.

Tags:
Next Story
Share it