Theme Check

ஆச்சர்யம்! 10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பிறகும் வேலை செய்யும் ஐபோன்!!

ஆச்சர்யம்! 10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பிறகும் வேலை செய்யும் ஐபோன்!!

ஆச்சர்யம்! 10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பிறகும் வேலை செய்யும் ஐபோன்!!
X

10 மாதங்களுக்கு முன் ஆற்றில் தொலைத்த ஐபோன் தற்போது மீண்டும் வழக்கம்போல வேலை செய்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் தனது ஐபோனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு விருந்தின் போது வை நதியில் தொலைத்தார். தேடிப்பார்த்தும் ஐபோனை திரும்பக் கண்டுபிடிக்க இயலாமல் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர், ஏறக்குறைய பத்து மாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் தனது குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் செய்யும் போது, டேவிஸின் ஐபோனைக் கண்டார். ஆற்றில் இருந்து தொலைந்த ஐபோனை எடுத்தார்.

ஃபோன் ரீஸ்டார்ட் ஆகாது என்று தெரிந்திருந்தும், அதில் "சென்டிமென்ட்" விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று நினைத்ததால், ஃபோனை உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், அவர் சாதனத்தை இயக்கியபோது, அவரால் நம்ப முடியவில்லை.

iphone1

ஃபோன் ஆக தொடங்கி போது வால்பேப்பராக ஆகஸ்ட் 13 தேதியுடன் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ஸ்கிரீன்சேவரைக் கண்டார். தொலைந்து போன ஐபோன் பற்றி அந்த புகைப்படத்துடன் மிகுவல் பச்சேகோ முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவு 4000 முறை பகிரப்பட்டது. ஐபோனை தொலைத்த டேவிஸ் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனாலும் அவரது நண்பர்கள், தொலைபேசியை அடையாளம் கண்டு, பச்சேகோவுடன் தொடர்புகொள்ள டேவிஸுக்கு உதவினர்.

இதையடுத்து ஆற்றில் விழுந்த தனது ஐபோனை 10 மாதங்களுக்கு பின் வழக்கம்போல வேலை செய்யும் நிலையில் டேவிஸ் பெற்றுக் கொண்டார். இது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it