ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சூர்யா படம் தேர்வு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சூர்யா படம் தேர்வு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சூர்யா படம் தேர்வு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
X

தமிழ் சினிமாவில் முண்ணனி கதாநாயகர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சூர்யா. சமீபத்தில் இவருடைய சூரரை போற்று படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கரின் பொது பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் என அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடஇந்தப்படம் அனுப்பி வைக்கப்பட்டது.



சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளியும் இணைந்து நடித்த இந்த படத்தை பொதுப்பிரிவு போட்டியில் திரையிடுவதற்காக ஆஸ்கார் அகாடமி திரையில் பதிவேற்றம் செய்தனர். தற்போது சூரரை போற்று படம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஆஸ்கார் விருது போட்டிக்கு இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் இடம்பெற தகுதியான படங்கள் பட்டியலை ஆஸ்கார் அமைப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் உலக அளவில் இடம்பெற்ற 366 படங்கள் வரிசையில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை பிரிவில் சூரரை போற்று படம் இடம் பெற்றுள்ளது .இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப்பட்டியல் 366 படங்களையும் வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it