அன்றே கணித்தார் சூர்யா.. சிங்கம் பட வில்லன் நடிகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது !!

அன்றே கணித்தார் சூர்யா.. சிங்கம் பட வில்லன் நடிகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது !!

அன்றே கணித்தார் சூர்யா.. சிங்கம் பட வில்லன் நடிகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது !!
X

போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகரை பெங்களூரு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை தற்போது அன்றே கணித்தார் நடிகர் சூர்யா என்ற மீன்ஸ் உடன் வைரலாகிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கு..

பாலிவுட், கன்னடா, தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் செக்யூம் மால்வின் (Chekwume Malvin).இவர் தமிழில் நடிகர் சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும், கமலின் விஸ்வரூபம் படத்திலும் நடித்துள்ளார்.

singam surya

மால்வின் மருத்துவ விசாவில் இந்தியாவில் இருந்ததாகவும், மும்பையில் உள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் இரண்டு மாத பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிநலையில், பெங்களூருவில் எச்.பி.ஆர் லேஅவுட்டில் தங்கியிருந்து மால்வினை கைது செய்தனர். இவர் கல்லூரி மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் போதைப் பொருள் விநியோகித்து வந்தது தெரியவந்த நிலையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்தனர்.

அவரிடமிருந்து 15 கிராமுக்கு மேற்பட்ட எம்டிஎம்ஏ, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 மிலி ஹாஷ் ஆயில், செல்போன், ரூ. 2,500 ரொக்க பணம் மற்றும் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர் பெங்களூரு போலீசார். மல்வின் தமிழில் விஸ்வரூபம், சிங்கம் 2 உள்பட அண்ணா பாண்ட், தில்வாலே, ஜம்பூ சவரி , பரமாத்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

singam surya

இவர் சிங்கம் 2 படத்தில் வில்லன் நடிகரான டேனியுடன் வருவார். அப்போது மால்வினை நடிகர் சூர்யா போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பார். அதேபோன்று தற்போது உண்மையில் நடந்ததால், அன்றே கணித்தார் சூர்யா என மீம்ஸ் உலா வருகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it