தமிழில் ஹிட்டடித்த சீரியலின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்..!

தமிழில் ஹிட்டடித்த சீரியலின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்..!

தமிழில் ஹிட்டடித்த சீரியலின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்..!
X

சன் டிவியில் கடந்த 2013 முதல் 2017 வரை ஒளிப்பரப்பாகி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற தொடர் திருமதி. செல்வம். சஞ்சீவ், அபிதா இருவரும் இணைந்த நடித்த இந்த சீரியல் இன்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இந்தி ரீமேக்கில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ள விபரம் தெரியவந்துள்ளது. அவர் சஞ்சீவ் நடித்து கதாபாத்திரத்தில் நடிக்க, அபிதாவின் கதாபாத்திரத்தில் அனிகீதா லோகானந்தா நடித்துள்ளார். தமிழைப் போலவே இந்தியிலும் இந்த சீரியல் வரவேற்பை குவித்துள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, திருமதி செல்வம் சீரியலின் ரீமேக்கான பவித்ரா ரிஷ்டாவில், சுஷாந்தின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவரது நடிப்பை பார்த்து, மற்றுமொரு சீரியலின் முதன்மை கேரக்டரிலும் அவர் நடிக்க வேண்டுமென்று ஜீ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சீரியலை தொடர்ந்து தான் சுஷாந்த் சிங் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போதும் இந்த சீரியல் யூ - ட்யூப் மற்றும் பிரபல ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கிறது. தற்போது இந்த சீரியலை பார்க்கும் பலர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்


Tags:
Next Story
Share it