துரத்திய சந்தேக புத்தி.. தேங்காய் வெட்டும் அரிவாளால் மனைவியின் கையை துண்டித்த கணவன் !
துரத்திய சந்தேக புத்தி.. தேங்காய் வெட்டும் அரிவாளால் மனைவியின் கையை துண்டித்த கணவன் !

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கையை கணவர் அரிவாளால் வெட்டி தனியாக துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் சின்ன முத்து (45)- நாகஜோதி (40) தம்பதி வசித்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நாகஜோதிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக சிலர் சின்னமுத்துவிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவ்வபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக வீட்டில் மீண்டும் வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரத்தில் தேங்காய் வெட்டும் அரிவாளால் நாகஜோதியின் வலது கையை சின்னமுத்து வெட்டியுள்ளார். இதில், நாகஜோதியின் கை மணிகட்டிற்கு கீழ் துண்டானது.

இதனால் அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கை துண்டிக்கப்பட்ட நாகஜோதியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் சின்ன முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கையை கணவர் துண்டித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

