Theme Check

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. மிரட்டலான வீரர்களை அறிவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி !!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. மிரட்டலான வீரர்களை அறிவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி !!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. மிரட்டலான வீரர்களை அறிவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி !!
X

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதன் பிறகு டி20 போட்டிகள் 16ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

ind wesind wes

இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லார்ட் தலைமையிலான அணியில், மிரட்டலான அதிரடி பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

பொல்லார்ட்(கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹோசின், பிராண்டன் கிங், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

கீரன் பொலார்ட் (கேப்டன்), கிமார் ரோச், எங்க்ருமா பானர், பிராண்டன் கிங், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஸ்மித், ஒடியன் ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதன் விவரத்தையும் இப்போது பார்க்கலாம்..

d

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:-

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்..

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்திய டி20 அணி:-

ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

newstm.in

Tags:
Next Story
Share it