Theme Check

டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு !

டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு !

டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு !
X

கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டமான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

aus nz

துபாய் மைதானத்தில் டி20 போட்டிகளில் பெரும்பாலும் இரண்டாவதாக பேட் செய்த அணி தான் வென்றுள்ளது என்ற வரலாறு பதிவாகி உள்ளது. இதனை மாற்றும் உத்வேகத்தில் நியூசிலாந்து அணி களம்காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் அரையிறுதியில் அசத்தலான வெற்றியை பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன. இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக உள்ளன. எனினும் நியூசிலாந்து அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கான்வே இல்லாதது சின்ன பின்னடைவு தான்.
aus nz
ஆடும் லெவன் விவரம்...

நியூசிலாந்து:

மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் செய்ஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, போல்ட்.

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

newstm.in


Tags:
Next Story
Share it