Theme Check

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் .. இந்தியாவில் இல்லையாம்? அக்டோபரில் தொடங்குகிறது !

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் .. இந்தியாவில் இல்லையாம்? அக்டோபரில் தொடங்குகிறது !

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் .. இந்தியாவில் இல்லையாம்? அக்டோபரில் தொடங்குகிறது !
X

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்குரிய முதற்கட்ட பணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடங்கிவிட்டது.


இதனிடையே, ஏற்கனவே கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை அமீரகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் தொடக்க கட்ட சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it