Theme Check

டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் வெற்றிபெற இந்திய ரசிகர்கள் வேண்டுதல் !! இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் வெற்றிபெற இந்திய ரசிகர்கள் வேண்டுதல் !! இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் வெற்றிபெற இந்திய ரசிகர்கள் வேண்டுதல் !! இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
X

டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இரண்டாவதாக அரையிறுதி செல்லும் அணி எது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

india win

அதாவது நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி உள்ளது. தற்போது வரை நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பது தெரிகிறது. ஆனால் ஒரு அதிசயம் நடந்தால் இந்தியா அரையிறுதி செல்லும் வாய்ப்பும் உள்ளது.

india win

முதல் இரண்டில் ஒரு போட்டியிலாவது இந்தியா வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்புகக்கு உறுதியாக சென்றிருக்கும். தற்போது அந்த வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் வெற்றியை பொறுத்தே அரையிறுதிக்கு முன்னேறும் அணி தெரியவரும். நியூசிலாந்து இந்த போட்டியில் வென்றுவிட்டால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதி சுற்றில் முன்னேறும் வாய்ப்புள்ளது.

india win

அதாவது, நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வெற்றி மூன்று அணிகளும் ஒரே புள்ளிகளை பெறும். அதன்பின்னர் இந்தியா, நமிபியா அணியை அதிகபட்ச ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும். இப்படி நடந்தால் தான் இந்தியா அரையிறுதிக்கு செல்லும். இந்தியா 4 புள்ளிகளுடன் +1.62 ரன்ரேட்டில் 3-வது இடத்தில் உள்ளது. குரூப் 2 பிரிவில் அதிக ரன்ரேட் உடன் இந்தியா இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையின் முடிவில் தான் அரையிறுதிக்கு முன்னேறும் அணி தெரியவரும்.

newstm.in

Tags:
Next Story
Share it