டி20 உலக கோப்பை: இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு !!
டி20 உலக கோப்பை: இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு !!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கியது. தகுதி சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது சூப்பர் 12 போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. மற்ற 4 அணிகள் தகுதி சுற்றில் இருந்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்போட்டி துபாயில் நாளை நடைபெறவுள்ளது. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு; - பாபர் அசம் (கேப்டன்), ரிஸ்வான், பக்தர், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷாஹின், ஹரிஸ், ஹைடர். இந்த 11 வீரர்கள் கொண்ட அணியினர் தான் நாளை விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.
newstm.in

