டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு !!
டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு !!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இது முடிந்ததும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதற்கு ஒவ்வொரு நாடும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகிறது.

அநத வகையில் டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸாம் தலைமையிலான அணியில் சோயிப் மாலிக், சர்ஃபராஸ் அஹமது, வஹாப் ரியாஸ், முகமது அமீர் ஆகிய மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. தொடக்க வீரர் சர்ஜீல் கான், ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரம் ஆகியோரும் தேர்வாகவில்லை. ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகிய இருவரும் டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு முக்கிய மற்றும் மூத்த வீரர்கள் சேர்க்கப்படாதது பல்வேறு விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வீரர்கள் தேர்வுக்குழு மீது கடும் விமர்சனங்களை இணையதளங்கள் மூலம் முன்வைத்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 24 அன்று தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணி: பாபர் அஸாம், ஷதாப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, சோயிப் மக்சூட், அஸாம் கான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன். மாற்று வீரர்கள்: உஸ்மான் காதர், ஷாநவாஸ் தானி, ஃபகார் ஸமான்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக இருந்த மிஸ்பா உல் ஹக், வாக்கர் யூனிஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

