Theme Check

டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி !!

டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி !!

டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி !!
X

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதன் ‘சூப்பர்-12’ சுற்றின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா- பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை பெரும் ஆவலுடன் எதிர்பாத்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மற்ற தொடர்களில் விளையாடாமல், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டும் மோதுகிறது.இதனால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் போடப்பட்டுள்ளது.

ind pak

இதில் டாஸ் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி முதல்முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித், ராகுல், பந்த், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர்குமார், வருண் சக்ரவர்த்தி, ஷமி, பும்ரா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

India XI: KL Rahul, R Sharma, V Kohli, S Yadav, R Pant, H Pandya, R Jadeja, B Kumar, V Chakaravarthy, M Shami, J Bumrah

Pakistan XI: B Azam, Mohammad Rizwan, F Zaman, M Hafeez, S Malik, A Ali, S Khan, I Wasim, H Ali, H Rauf, S Afridi

newstm.in

Tags:
Next Story
Share it