Theme Check

மக்களே பயன்படுத்திக்கோங்க..!! இன்று முதல் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்!!

மக்களே பயன்படுத்திக்கோங்க..!! இன்று முதல் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்!!

மக்களே பயன்படுத்திக்கோங்க..!! இன்று முதல் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்!!
X

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூலம் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

கொரோனா கட்டுக்குள் வந்தததாலும் பலரும் இரண்டாம் தவனை தடுப்பூசி, பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதிவா்களுக்கு கட்டணமின்றி செலுத்தப்பட்டது. கட்டணம் செலுத்தி பூஸ்டா் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டிய 18 முதல் 59 வயதினரில் தகுதியுடைய 77 கோடி பேரில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவா்களே இதுவரை செலுத்தியுள்ளனா்.

Booster

இந்தச் சூழலில், முன்னெச்சரிக்கை தவணையை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்தச் சூழலில், முன்னெச்சரிக்கை தவணையை அனைத்துத் தரப்பினருக்கும் கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பூஸ்டா் டோஸ் தடுப்பூசியை 18 முதல் 59 வயது வரையிலான பிரிவினருக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இன்று (ஜூலை 15) முதல் கட்டணமின்றி செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது, என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின தொடா் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 நாள்கள் சிறப்பு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் ஜூலை 15ஆம் தேதி முதல் அடுத்த 75 நாள்களுக்கு பூஸ்டா் டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்பட உள்ளது. இந்த முடிவை எடுத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்த முடிவு, கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும். தகுதியுள்ள அனைவரும் முன்னெச்சரிக்கை தவணையை விரைந்து செலுத்திக்கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

vaccine

முன்னதாக, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) பரிந்துரையின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை தவணைக்கான இடைவெளியை 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it