Theme Check

பூங்காவில் வைத்து தாலி கட்டிய இளைஞர்! கதறியழுத 16 வயது மாணவி!

பூங்காவில் வைத்து தாலி கட்டிய இளைஞர்! கதறியழுத 16 வயது மாணவி!

பூங்காவில் வைத்து தாலி கட்டிய இளைஞர்! கதறியழுத 16 வயது மாணவி!
X

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது குடியிருப்பின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை மயக்கி தனது காதல் வலையில் சிறுமியில் விழச்செய்துள்ளார் அந்த இளைஞர். பின்னர் இருவரும் ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்தனர்.

இருவரும் ஒன்றாக தியேட்டர்களுக்கு செல்வது என பல இடங்களுக்கும் சென்று தங்களது காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். ஹைதராபாத்தின் யூசுப்குடா பூங்காவிற்கு இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கின்றனர். ஆனால் கடந்த மே 5ம் தேதி அவ்விருவரும் அந்த பூங்காவிற்கு சென்ற போது இளைஞரின் எதிர்பாராத செயலால் சிறுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதாவது, சிறுமி எதிர்பாராத நேரத்தில் பையில் வைத்திருந்த தாலியை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்டியிருக்கிறார். இதனால் சிறுமி அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனை பயன்படுத்தி அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய இளைஞர் முயற்சித்துள்ளார். எனினும் சிறுமி தடுத்ததால் பாலியல் சில்மிசம் செய்து விட்டு நமக்கு திருமணம் ஆகிவிட்டதால் இதில் தவறு ஒன்றும் இல்லை என கூறி அச்சிறுமியை சமாதானம் செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர் தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அச்சிறுமியை கூட்டிச் சென்று தங்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார். உறவினர் அந்த இளைஞரின் தாயை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். அந்த இளைஞரின் தாயார், அங்கு வந்து இருவரையும் கண்டித்ததுடன் இனிமேல் என் மகனுடன் பேசுவதை பார்த்தால் அவ்வளவு தான் என கூறி அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

வீட்டில் சில நாட்களாக மகளின் செயலில் சந்தேகமடைந்த தாயார் என்ன நடந்தது என விசாரித்தபோது நடந்தவற்றை அச்சிறுமி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அவருடைய தாயார் அந்த இளைஞர் மீது பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it